Tuesday, October 23, 2012

தமிழ் நட்சத்திரங்களுக்கு இணையான சமஸ்க்ருத பெயர்கள் .


1) அசுவ‌தி: Aswathi, Ashwini –Alpha, Beta –Aries

2) ப‌ர‌ணி: Bharani, Bharani – No 28,29,41 Taurus

3) கார்த்திகை: Karthigai, Krittika - Pleiades

4) ரோஹினி: Rohini, Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus

5) மிருக‌ஷீரிஷ‌ம்: Mrigashirisham, Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion

6) திருவாதிரை: Thiruvathirai, Aardraa –Betelgeaux – Alpha Orion

7) புன‌ர்பூச‌ம்: Punarpoosam, Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively

8) பூச‌ம்: Poosam, Pushya – Gama, Delta and Theta of Cancer

9) ஆயில்ய‌ம்: Ayilyam, Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra

10) ம‌க‌ம்: Makam, Maagha – Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis

11) பூர‌ம்: Pooram, Poorva Phalkuni - Delta and Theta Leo

12) உத்திர‌ம்: Uthiram, Utra Phalkuni – Beta and 93 Leo

13) ஹ‌ஸ்த‌ம்: Hastam, Hasta – Delta, Gama, Eta, Virgo

14) சித்திரை: Chithirai, Chitraa – Spica, Alpha Virgo

15) ஸ்வாதி: Swathi, Swaati – Arcturus – Alpha Bootes

16) விசாக‌ம்: Visakam, Vishaakha - Alpha, Beta etc Libra

17) அனுஷ‌ம்: Anusham, Anuraadha – Beta, Delta, Pi -
Scorpia

18) கேட்டை: Kettai, Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio

19) மூல‌ம்: Moolam, Mula – Scorpio, tail stars

20) பூராட‌ம்: Pooradam, Poorvaashadaa – Delta and
Epsilon Sagittarius

21) உத்திராட‌ம்: Uthiradam, Uttaraashaada - Zeta and
Omicron Sagittarius

22) திருவோண‌ம்: Thiruvonam, Shraavanaa – Altair –
Alpha Aquila

23) அவிட்ட‌ம்: Avittam, Dhanishtha - Delphinus

24) ச‌த‌ய‌ம்: Sathayam, Shatabhisak – Lambda Aquarius

25) பூர‌‌ட்டா‌தி: Pooratadhi, Poorva proshtapatha  – Alpha
and Beta Pegasus

26) உத்திர‌ட்டாதி: Uthiratadhi, Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda

27) ரேவ‌தி: Revathi, Revathi – Zeta Piscum

Source(s):

Tuesday, March 8, 2011

வலி


கால் வலித்தது ...

காலை காட்சி கண்டு விட்டு

கடைத் தெருவை கடக்கையிலே

கால்கள் வலித்தன .

கீச்சொலி யில் கடந்து சென்ற

வாகனத்தை கை தட்டி அழைத்தேன்.

ஏ ஏ ஏய்... ரிக் ஷா... !!
பணிக்கர் கடைக்கு பக்கத்து சந்து ...

பணித்து விட்டு பதிலுக்குக் காத்திராமல்

பஞ்சு இருக்கையிலே பதிந்து விட்டேன்.

கால் நீட்டி கண் அயரும் வேளையிலே

கவனித்தேன் கண்ணில் பட்ட காலை .

ஓட்டியவனின் மரக் கால் !!
...
....

மனம் வலித்தது .

கண்கள் பனித்தன .

Wednesday, March 2, 2011

என் வந்தனம்



கம்பனையும் கவிராயரையும்

காலமெல்லாம் காணச்செய்யும் கலைப்பணியில் ,

கணக்கில்லா கவிதைகளை கண்ணிமைக்கும் நேரத்திலே கணிணி

மூலம் காட்டி வரும் கவிஞர்கள் தொடுத்த வலைப் பூக்களின்

வாசத்தில் வந்தமர்ந்த வண்டு நான் .

என்னைவரவேற்று வாழ்த்துரைத்து

வலைதளத்தை
வழி நடத்த

வணக்கத்துடன் வேண்டுகிறேன்.

அன்புடன் கணேஷ்.

.